2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடபகுதி தொழில்துறைகளை மேம்படுத்த உதவுமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 14 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதியில் இருக்கும் உற்பத்திசார் வளங்களை இனங்கண்டு அவற்றை கொண்டு உருவாக்கக்கூடிய தொழில்துறைகளை மேம்படுத்துவதற்கு உதவுமாறு உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களை, வடமாகாண சபை கோரியுள்ளது.

இது தொடர்பில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 30 வருடகால யுத்தம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட புறக்கணிப்புக்கள், பாகுபாடுகள் காரணமாக தமது வாழ்வாதாரங்களை இழந்தும், தொலைத்துவிட்டும் நிரந்தர தொழில் வருமானம் எதுவுமின்றியும் அல்லல்படும் எமது மக்களின் வாழ்வியலையும் வாழ்வாதாரங்களையும் மேம்படுத்துவது மிக மிக அவசியமாகின்றது.

இதன் பொருட்டு, எமது தாயகத்தில் இருக்கக்கூடிய உற்பத்தி சார் வளங்களை இனங்கண்டு அவற்றைக்கொண்டு உருவாக்கக்கூடிய தொழில்களையும் இனங்கண்டு திட்டங்களை தயாரித்து எமக்கு வழங்கி உதவ வேண்டுமென உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற துறைசார் அறிவும், ஆற்றலும் அனுபவமும் மற்றும் நிபுணத்துவமும் கொண்ட உறவுகளை வடமாகாண சபை வேண்டி நிற்கின்றது.

அத்துடன், இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அயல்பணி சேவைகளில் எமது இளைஞர்கள் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய ஆலோசனைகளும் வரவேற்கத்தக்கது.

வடக்கு மாகாண சபை தனித்து நின்று திட்டங்களை தயாரிக்கலாம் என்றோ அல்லது அமுல்படுத்தலாம் என்றோ கருதவில்லை. மாறாக எமது உறவுகளின் உதவிகளுடனும் ஒத்துழைப்புக்களுடனுமே எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை முன்னேற்றலாம் என திடமாக நம்புகின்றது.

இந்த முயற்சியில் எம்முடன் இணைந்து கொள்ள யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள எமது பேரவை செயலகத்துடன் தபால் மூலமாகவோ councilnpc@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .