2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் தாலிக்கொடி திருடி வவுனியாவில் விற்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 14 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

யாழ். ஊரெழு பகுதியிலுள்ள  வீடொன்றிலிருந்து சூட்சுமமான முறையில் திருடிய 13 பவுண் தாலிக்கொடியை வவுனியா பசார் வீதியிலுள்ள  கடையொன்றில் விற்பனை செய்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரை நேற்று  வியாழக்கிழமை (13) கைதுசெய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது,
குறித்த தாலிக்கொடியுடன் கைதுசெய்யப்பட்ட ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு உட்பட பல்வேறு களவு தொடர்பான வழக்குகள் உள்ளன.  யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மல்லாகம், மன்னார் ஆகிய நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளுக்காக 12 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது.

இதேவேளை,  தாலிக்கொடி திருடப்பட்ட வீட்டில் பொலிஸார் சென்று விசாரணை மேற்கொள்ளும்வரை அவர்களின் வீட்டில் தாலிக்கொடி திருடப்பட்டமை அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .