2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தேசிய தாய், சேய் நல மேன்மைக்கான விருதுகள்

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


இலங்கையின் மத்திய சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தினால் இலங்கையிலுள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் நடைபெற்ற தேசிய தாய், சேய் நல மேன்மை விருதுக்கான போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் வடமாகாணத்தில் முதலாம் இடத்தினையும்  கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பெற்றுள்ளது.

இவர்களுக்கான தேசிய விருது வழங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை(14)பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மத்திய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன முதன்மை விருந்தினராகக் கலந்து விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.

இவ் விழாவில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக்கலாநிதி த.nஐயசீலன் மற்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக்கலாநிதி சுரணுகா ஆகியோர் தலைமையில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இவ் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

இப் போட்டியில் இலங்கையில் உள்ள  341 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒழுங்கமைப்பும், செயற்பாடுகளும் மதிப்பிடப்பட்டு சிறந்த சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் தெரிவுசெய்யப்பட்டன.

இப் போட்டியின் முதல் கட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் தெரிவுசெய்யப்பட்டன.

இரண்டாவது கட்டத்தில் ஒவ்வொரு மாகாண மட்டத்திலும்  மூன்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும், மூன்றாவது கட்டமாக தேசிய மட்டத்தில் மூன்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் தெரிவுசெய்யப்பட்டன.

இப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகொட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இரண்டாம் இடத்தினை யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் மூன்றாம் இடத்தினை குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பொல்காவல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் பெற்றுக்கொண்டன.

வட மாகாணத்தில் இரண்டாம் இடத்தினை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் மூன்றாம் இடத்தினை சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும்; பெற்றுக்கொண்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .