2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இராணுவத்தினர் வேண்டாம் - டக்ளஸ்

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தை இருக்க வேண்டாம் என்று நாம் கூறவில்லை. இராணுவத்தினர் பாதுகாப்பிற்கு இருக்க வேண்டும். இதேவேளை மக்களுடைய காணிகளை இராணுவத்தினர் தங்குவதற்கு பிடிக்க வேண்டாம் என்றே கூறுவதாக பாரம்பரிய  கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில்கள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, சனிக்கிழமை (15) தெரிவித்துள்ளார்.

தேசத்தின் மகுடம் செயல் திட்டத்தின்  கீழ் தேசிய மர நடுகைத் திட்டம், சனிக்கிழமை வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையாகவுள்ள கீரிமலை தட்சன்காட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது. இதற்கான திட்டம் இவ்வாண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான நிதியுதவியும் கூட கிடைக்கப்பெற்றுள்ளது.

மக்களுடைய சொந்த இடங்களில் மீளக்குடியேறுதல் சம்பந்தமாக நாம் ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வருகின்றோம்.

ஏற்கனவே படிப்படியாக மக்களுடைய மீள்குடியேற்றம் இடம்பெற்று வந்துள்ளது. இதனைப் போன்ற ஏனைய இடங்களிலும் மக்களை குடியேற்றுவது சம்பந்தமாக  நாம் அரசுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றோம். விரைவில் அதுவும் செயல்படுத்தப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .