2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அநாகரிகமாக நடந்து கொண்டவருக்கு நீதிமன்ற வளாகத்தை துப்பரவு செய்யுமாறு உத்தரவு

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மதுபோதையில் வீதியில் சென்றவர்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட நெல்லியடி பகுதியினை சேர்ந்த 21 வயதுடைய நபரை, 100 மணித்தியாலங்கள் நீதிமன்ற வளாகத்தில் சமூக சீர்திருத்த பணிக்கு உட்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன், வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேக நபர் வீதியில் சென்றவர்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட சந்தேகத்தில் கடந்த 11ஆம் திகதி நெல்லியடி பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .