2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை கட்டிப்பிடித்தவர் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 16 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வீட்டுத் தோட்டமொன்றில் பாக்கு பிடுங்குவதற்காகச் சென்ற நபரொருவர், அந்த வீட்டுத்தோட்ட கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை கட்டிப்பிடித்ததை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், மல்லாகம், தொந்தனை பகுதியில் சனிக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

மல்லாகம், கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டுத் தோட்டத்திலுள்ள பாக்குமரத்தில் ஏறி பாக்கு பிடுங்கிக்கொண்டிருந்துள்ள சந்தேகநபர், கிணற்றடியில் மேற்படி பெண் குளித்துக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளார். இந்நிலையில், அப்பெண் குளித்துக்கொண்டிருந்த இடத்துக்கு சென்ற சந்தேகநபர், அப்பெண்ணை இறுக அணைத்துக்கொண்டுள்ளார்.

சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண், கூக்குரலிட்டுள்ளார். இந்நிலையில், அங்கு கூடிய அயலவர்கள், சந்தேகநபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் என்று தெல்லிப்பளை பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .