2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சுன்னாகத்தில் ரேடியேட்டர்கள் கொள்ளை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 16 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகர பகுதியில் அமைந்துள்ள ரேடியேட்டர் விற்பனை நிலையமொன்றுக்குள் சனிக்கிழமை (15) இரவு புகுந்துள்ள கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்த 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 ரேடியேட்டர்களைக் கொள்ளையிட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வியாபார நிலையத்தின் முன்கதவு உடைக்கப்பட்டே இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, சுன்னாகத்திலுள்ள உணவகம் ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய மோட்டார் சைக்கிளொன்று சனிக்கிழமை (15) இரவு திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிளை உணவகததுக்கு வெளியில் நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாமற்போயுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வருவதாக சுன்னாகம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .