2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

புதிய இன இராசவள்ளி அறிமுகம்

Thipaan   / 2014 நவம்பர் 17 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா


யாழ். திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தால், யாழ். மாவட்டத்தில் சிறந்த வகை இராசவள்ளி கிழங்கு இனம் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றியளித்துள்ளதாக, திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன், திங்கட்கிழமை (17) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

இந்த வகை இராசவள்ளி பயிரிடப்பட்டு 7 அல்லது 8 மாதத்துக்குள் அதிக விளைச்சலை தரவல்லது.

பரிசோதனையில் வெற்றியளித்ததையடுத்து, அவை தற்போது பயனாளிகளுக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வகை இராசவள்ளியை பயிரிட்டு விவசாயிகள் சிறந்த பயன்களை பெற்றிடமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .