2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தாலிக்கொடி, சங்கிலி அறுக்கும் இடம்

George   / 2014 நவம்பர் 17 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். மானிப்பாய் சந்தைக்கு முன்பாக செல்லும் முத்துத்தம்பி வீதியில் திருட்டு நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறுவது தொடர்பில் எச்சரிக்கை செய்யப்பட்ட சுலோக அட்டையொன்று திங்கட்கிழமை (17) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

'கவனம், தாலிக்கொடி, சங்கிலி அறுக்கும் இடம்' என அந்த சுலோக அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி வீதியில் அமைந்துள்ள பெரிய பற்றைக்காணிகளுக்குள் ஒளிந்திருக்கும் திருடர்கள் பெண்களிடம் நகைகள் அபகரிக்கும் நடவடிக்கையில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனையடுத்தே, இந்த எச்சரிக்கை சுலோக அட்டை அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .