2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குருக்களின் மனைவியை கட்டிவைத்தவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 18 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், புன்னாலைகட்டுவன், ஈவினை பகுதியில் குருக்கள் ஒருவரின் மனைவியை கட்டிவைத்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்ற மூன்று சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

ஆலயப் பணிகளை மேற்கொள்வதற்காக, குருக்கள் சென்றிருந்த வேளையில், அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ள நான்கு நபர்கள், குருக்களின் மனைவியை கட்டிவைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது, குருக்கள் மனைவி கூக்குரலிடவே கொள்ளையர்கள் தப்பித்து ஓட முயன்றுள்ளனர். கூக்குரல் சத்தம் கேட்டு அங்கு ஒன்றுகூடிய அயலவர்கள், தப்பித்து ஓடிய கொள்ளையர்களில் மூவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .