2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முன்னாள் போராளியை காணவில்லை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 19 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியாகவிருந்த குருநகர் ஐந்து மாடிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோனிமுத்து அன்டன் ஜெயரோன் (வயது 31) என்பரை, கடந்த 17ஆம் திகதி முதல் காணவில்லையென அவரது மனைவி செவ்வாய்க்கிழமை (18) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

கடையொன்றுக்கு  சென்று வருவதாக சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான இவர், அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டவர் ஆவார்.

முறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .