2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மாணவியுடன் பாழடைந்த வீட்டில் உல்லாசம்; முதியவர் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 19 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி கல்வயல் பகுதியில் 15 வயது பாடசாலை மாணவியுடன் உல்லாசமாக இருந்த 60 வயது வயோதிபர் ஒருவரை புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் மாணவி, பாடசாலை சீருடையுடன் வயோதிபருடன் பாழடைந்த வீடொன்றில் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து, அவ்விடத்துக்குச் சென்ற, மாணவியை மீட்டதுடன் முதியவரை கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

அத்துடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .