2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் இருந்து இ.போ.ச.வின் புதிய சேவைகள்

George   / 2014 நவம்பர் 19 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா
 
யாழ்ப்பாணத்தில் இருந்து பொத்துவில், கண்டி, மன்னார் ஆகிய பிரதேசங்களுக்கான புதிய பஸ் சேவைகயை 15ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை முகாமையாளர் செ.குலபாலசெல்வம், புதன்கிழமை(19) தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
யாழ்ப்பாணத்தில் இருந்து பொத்துவிலுக்கு இரவு 8.30 மணிக்கும் பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மாலை 6.30 மணிக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு மாலை 2.45 மணிக்கும் கண்டியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மதியம் 2.30 மணிக்கும்
 
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு மதியம் 1.30 மணிக்கும் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மாலை 5 மணிக்கும் இந்த புதிய பேருந்து சேவைகள் இடம்பெறும் 
 
அத்துடன் குறிகட்டுவானில் இருந்து கொழும்பிற்கு இரவு 9 மணிக்கும் கொழும்பில் இருந்து குறிகட்டுவானிற்கு இரவு 10 மணிக்கும் பஸ் சேவை இடம்பெற்றுவருவதாக அவர் மேலும் கூறினார்.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .