2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்துணவு

George   / 2014 நவம்பர் 19 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்

யாழ். சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதியிலுள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கு 2015ஆம் ஆண்டு முதல், சத்துணவு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தீர்மானம் சாவகச்சேரி நகர சபையில் புதன்கிழமை(19) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபையின் மாதாந்த கூட்டத்தொடர் நகர சபை கட்டிடத்தொகுதியில் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் புதன்கிழமை (19) இடம்பெற்றது.

இதன்போது, சாவகச்சேரி பிரதேத்திலுள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கும் நடவடிக்கைகளை நகர சபையின் 2015ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் உள்ளடக்கி, திட்டத்தை 2015ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற தீர்மானத்தை நகர சபை உறுப்பினர் அ.பாலமயூரன் சபைக்கு கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தை மற்றொரு உறுப்பினர் நா.கிஷோர் வழிமொழிந்தார். உறுப்பினர்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரி நகர சபையில் 9 ஆளுங்கட்சி உறுப்பினர்களும் 2 எதிர்கட்சி உறுப்பினர்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .