2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கைதிகளை எரியூட்டியதாக கூறப்படும் இடங்கள் பார்வை

Kogilavani   / 2014 நவம்பர் 19 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

விடுதலைப் புலிகளின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் எரியூட்டப்பட்டதாக கூறப்படும் இடங்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (19) நேரில் சென்று பார்வையிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓட்டிசுட்டான் பகுதியில் அமைந்துள்ள இந்திமடு, சமளன்குளம் ஆகிய இடங்களை நீதவான் சென்று பார்வையிட்டார்.

நீதவானுடன் கொழும்பிலிருந்து வருகை தந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் குழுவும் சென்றிருந்தது.

அதேபோல், நாளை வியாழக்கிழமை (20) மேலும் ஒரு இடத்தையும் நீதவான் சென்று பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .