2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

காட்டு மரங்களை கடத்திய இருவர் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 20 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

12 இலட்சம் ரூபாய் பெறுமதியான காட்டுமரங்களை அனுமதிப்பத்திரமின்றி கடத்திச் சென்ற இருவரை, வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் வைத்து வியாழக்கிழமை (20) அதிகாலை கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

பாலமோட்டை காட்டுப் பகுதியிலிருந்து வவுனியா நகரத்துக்கு காட்டுமரங்களை கடத்திச் செல்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், மரங்களைக் கடத்துவதற்குப் பயன்பட்ட வாகனமும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

வவுனியா, பாலமோட்டை, நவ்வி ஆகிய பகுதிகளிலுள்ள காட்டுமரங்களை கடத்தும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகவும், அதற்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .