2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விசர்நாய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 21 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ்.சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாய்களுக்கு விசர்நாய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சங்கானை சுகாதார வைத்தியதிகாரி பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலி.மேற்கு (சங்கானை) பிரதேச சபையுடன் இணைந்து சுகாதார வைத்தியதிகாரி பணிமனை இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் அராலி பிரதேசத்திலேயே அதிகளவான நாய்களுக்கு விசர்நாய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

விசர்நாய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் இதுவரை 450இற்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்கி, தங்களுடைய வளர்ப்பு நாய்களுக்கு விசர்நாய் தடுப்பூசி ஏற்றும்படி சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, தெல்லிப்பளை பகுதியில் நால்வரை கடித்த நாய்க்கு விசர்நோய் தொற்று உள்ளமை கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார் வெள்ளிக்கிழமை (21) தெரிவித்தார்.

இதனையடுத்து, நாய்க்கடிக்கு இலக்கானவர்களுக்கு விசர்நாய் கடிக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தெல்லிப்பளை சந்தியில் நடமாடி திரிந்த நாயொன்று கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி வீதியால் சென்ற நால்வரை கடித்துள்ளது. கடியுண்டவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில் நால்வரையும் கடித்த நாய், அன்று மாலையே உயிரிழந்தது. நாய் இறந்ததிற்கான காரணத்தை கண்டறியவும், நாயின் நோய் தாக்க தன்மையை அறியவும் நாயின் தலை வெட்டப்பட்டு கொழும்பிலுள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த ஆய்வுகூட பரிசோதனையிலேயே விசர் நோய் தொற்றிற்கு நாய் உள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .