2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

காணாமற்போன யுவதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்

Sudharshini   / 2014 நவம்பர் 22 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  ற.றஜீவன்

கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்த யாழ்.பருத்தித்துறை, கற்கோவளம் வராத்துப்பளை பகுதியை சேர்ந்த அகிலகாந்தன் தர்சினி (வயது 19) என்ற யுவதி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை (21) வந்ததாக பொலிஸார் கூறினர்.

குறித்த யுவதி, கெருடாவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை காதலித்ததாகவும் அவருடன் சென்றிருந்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்தார்.

மேலும், தான் காணாமற்போயுள்ளதாக பத்திரிகையில் வெளிவந்த செய்திகளையடுத்தே தான் பொலிஸ் நிலையம் வந்ததாக யுவதி இதன்போது குறிப்பிட்டார்

இதானையடுத்து, யுவதியின் பெற்றோரை பொலிஸ் நிலையம் அழைத்து, யுவதி காணாமற்போகவில்லையென்ற விபரம் பெற்றோர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், யுவதி காதலனுடன் செல்வதற்கு விரும்பம் தெரிவித்ததையடுத்து அவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

குறித்த யுவதியின் பெற்றோரால் பொலிஸ் றிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.
 
கடந்த 17 ஆம் திகதி காலையில் வங்கியொன்றுக்கு செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்ட யுவதி மீண்டும் வீடு திரும்பாததையடுத்து,யுவதியின் பெற்றோரால் கடந்த புதன்கிழமை (19) மாலை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .