2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சா கடத்தல்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

George   / 2014 நவம்பர் 22 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். இளவாலை பகுதியில் 81 கிலோகிராம் கேரளா கஞ்சா பொதிகளுடன் கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா, வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.

72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்ட சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில், வெள்ளிக்கிழமை (21) ஆஜர்ப்படுத்திய வேளையிலேயே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்தியாவிலிருந்து மாதகல் துறைமுகம் ஊடாக கஞ்சாவை கடத்தி, அதனை கொழும்புக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், இளவாலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் ரி.கே.எஸ்.ஏ.றோகண தலைமையில் பொலிஸ் அணியொன்று நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்நிலையில், கார் ஒன்றில் கஞ்சா பொதிகளை கடத்தி சென்ற யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முறையே 19, 35 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கடந்த கடந்த 15ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டனர்.

காரிலிருந்து 1 கோடி 2 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.

நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, சந்தேகநபர்கள் 72 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .