2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கசிப்பு உற்பத்தி செய்த பெண்ணுக்கு விளக்கமறியல்

Thipaan   / 2014 நவம்பர் 22 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கசிப்பு உற்பத்தி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான, துன்னாலை கோட்டப்பளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன் வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.

கடந்த 15ஆம் திகதி மேற்படி பெண்ணின் வீட்டுக்கு விசாரணை ஒன்றுக்காக நெல்லியடி பொலிஸார் சென்றிருந்த போது, குறித்த பெண் கசிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்துள்ள நிலையில், பொலிஸார் அவரை கைது செய்திருந்தனர்.

அத்துடன், இரண்டு போத்தல் கசிப்பு, 10லீற்றர் சோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பவற்றையும் மீட்டிருந்தனர்.

சந்தேக நபரை வெள்ளிக்கிழமை (21) நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதவான் பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், சந்தேகநபரான பெண்ணின் கைவிரல் அடையாளத்தை பெற்று முன்குற்றம் உள்ளதா? என, அறிந்து அறிக்கை சமர்பிக்குமாறு, நெல்லியடி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .