2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நேரம் தவறி மண் ஏற்றிவந்த டிப்பர் சாரதி கைது

George   / 2014 நவம்பர் 22 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வழங்கப்பட்ட நேரம் தவறி மண் அகழ்ந்து வந்த புலோலி தெற்கு பகுதியினை சேர்ந்த 40 வயதுடைய, டிப்பர் சாரதியை வெள்ளிக்கிழமை (21) மாலை கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்.டி.எம்.சிந்தக்க என் பண்டார, சனிக்கிழமை (22) தெரிவித்தார்.

அத்துடன் டிப்பர் வாகனத்தினையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

மேற்படி வாகன சாரதி பளை பகுதியில் இருந்து, வழங்கப்பட்ட நேரத்துக்கு மாறாக அரை மணி நேரம் கழித்து குறித்த டிப்பரில் மணல் ஏற்றி வந்துள்ளார்.

இதன்போது கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் குறித்த டிப்பர் வாகனத்தை மறித்து சோதனையிட்ட போது, வழங்கப்பட்ட நேரம் தவறி மண் ஏற்றி வந்தமை தெரியவந்துள்ளது.

ஏ-9 நெடுஞ்சாலையூடாக மணல் ஏற்றி வரும் வாகனங்கள் காலை 6மணி தொடக்கம், மாலை 6மணி வரையான நேரப்பகுதியிலேயே மணல் ஏற்றி வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .