2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழ். மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்: டக்ளஸ்

Thipaan   / 2014 நவம்பர் 22 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி குடாநாட்டு மீனவர்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று(22) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் யாழ். செயலகமான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலகத்துக்;கு இன்றைய தினம் வருகை தந்த, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ். கடற்றொழிலாளர்களது உறவினர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கைதிகளது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடிவரும் நிலையில், இன்று காலையும் கலந்துரையாடியுள்ளேன்.
 அது மட்டுமின்றி, ஜனாதிபதியை மீண்டும் நாளைய தினம் சந்திக்கவுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடவுள்ளேன்.

இவ்விடயம் சட்டம் மற்றும் ஒழுங்குடன் சம்பந்தப்பட்டது என்பதால் நாளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சாதகமான பதிலை பெற்றுத்தருவேன்.

இது நீதிமன்ற தீர்ப்பு என்பதால், இரு நாடுகளுக்கிடையில் கைதிகளின் பரிமாற்றம் இடம்பெற்ற நிலையில், இந்தியாவுக்கும் எமது நாட்டுக்கும் சட்டம் வேறுபடுகிறது.

எனது மக்கள் என்ற வகையில் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான முடிவைப் பெற்றுத் தருவேன் என்றும் சுட்டிக்காட்டினார்.


இதனிடையே, அமைச்சரின் அலுவலகப் பிரதான வாயிலுக்கு வருகை தந்திருந்த கடற்றொழிலாளர்களது உறவினர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்டதும் கதறி அழுது, தமது உறவினர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கையினை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .