2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

காணாமல் போனவர் சந்தேகத்தில் கைது

George   / 2014 நவம்பர் 22 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாண பகுதியில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் நபரை, வெள்ளிக்கிழமை (21) திருட்டு சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார், சனிக்கிழமை (22) தெரிவித்தனர்.

குருநகர் 5மாடிக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த அந்தோனி முத்து அன்ரன் ஜெயரோன் (வயது 31) கடந்த 17ஆம் திகதி கடைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் மேற்படி நபரின் மனைவி கடந்த 18ஆம் திகதி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் காணாமல் போனதாக கூறப்படும் சந்தேக நபர், வெள்ளிக்கிழமை (21) சுன்னாகம் நகரப்பகுதியில் உள்ள வீடொன்றில் திருட முற்பட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வரும் சுன்னாகம் பொலிஸார், மருத்துவ பரிசோதனையின் பின்னர், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .