2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

George   / 2014 நவம்பர் 23 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாணத்திலுள்ள சாலைகளில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை தீர்ப்பதற்காக புதிதாக 58 பேருக்கான நியமனக்கடிதங்கள், சனிக்கிழமை (22) வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸர், ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தார்.

பேருந்து சாரதிகள் 23 பேருக்கும் நடத்துநர்கள் 35 பேருக்கும் இந்த நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாணத்திலுள்ள சாலைகளுக்கு அண்மையில் 70 புதிய பேருந்துகள் கிடைக்கப்பெற்றன. அதன் பின்னர், அந்த பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த ஆளணியினர் தேவையாகவிருந்தது.

இதனையடுத்து, புதிய ஆளணியினர் உள்வாங்கப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அவ்வாறு பயிற்சிகள் வழங்கப்பட்ட 58 பேருக்கே நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, காரைநகர், பருத்தித்துறை ஆகிய 4 சாலைகளில் தங்கள் கடமைகளை மேற்கொள்ளவுள்ளதாக முகாமையாளர் மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .