2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நெற் பயிர்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டால் அறியத்தரவும்

George   / 2014 நவம்பர் 23 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நெற் பயிர்களுக்கு நோய் தாக்கங்கள் ஏற்பட்டமை கண்டறியப்பட்டால் அது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்களத்துக்கு அறியத்தருமாறு கிளிநொச்சி மாவட்ட விவசாய (விரிவாக்கல்) திணைக்கள உதவி திட்டப்பணிப்பாளர் ஏ.செல்வராஜா, ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையின் போது, நெற்பயிர்களுக்கு நோய்த்தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்த கருத்து தொடர்பில் உதவி பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நெற்பயிர்களுக்கு நோய் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் எவரும் இதுவரையில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவில்லை.
நெற்பயிர்களுக்கு எரிபண்டம், மடிச்சுக்கட்டி ஆகிய நோய் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.

எனினும் இது தொடர்பில் இதுவரையில் விவசாயிகள் முறைப்பாடுகள் எதுவம் தெரிவிக்கவில்லை. நோய் தாக்கங்கள் குறித்து விவசாய (விரிவாக்கல்) திணைக்களத்துக்கு அறிய தந்தால், அதனை கட்டுப்படுத்துதற்குரிய நடவடிக்கைகளை முறைப்படி மேற்கொள்ளலாம்.

நோய் தாக்கங்கள் அனைத்துக்கும் கிருமி நாசினிகளை பயன்படுத்தக்கூடாது. ஆகவே விவசாயிகள் நோய் தாக்கங்கள் குறித்த விவசாய திணைக்களத்தில் முறைப்பாடு தெரிவிக்கவும் என அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .