2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சங்கானை பிரதேச சபையில் அறுவருக்கு நிரந்தர நியமனம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 25 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

வலிகாமம் மேற்கு (சங்கானை) பிரதேச சபையில் 6 பணியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் திங்கட்கிழமை (24) தெரிவித்தார்.

அலுவலக உதவியாளர் ஒருவருக்கும், வெளிக்கள பணியாளர் ஒருவருக்கும், காவலாளி ஒருவருக்கும், சுகாதார பணியாளர்கள் மூவருக்குமே இந்த நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக பிரதேச சபையில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றியவர்களுக்கே இந்த நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .