2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண சபையின் உதவி பொருட்கள், கொஸ்லந்தையில் பகிர்ந்தளிப்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 25 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக வடமாகாண சபையால் சேரிக்கப்பட்ட பொருட்கள், திங்கட்கிழமை (24) பொதுமக்களிடம் கொண்டு சென்று கையளிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை பாரவூர்தியொன்றில் கொண்டு சென்று அங்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தன்னுடன், வடமாகாண மீன்பிடி வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன், உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், மேரிகமலா குணசீலன், தர்மபால செனவரத்தின, இம்மானுவல் ஆர்னோல்ட் ஆகியோரும் சென்று பொருட்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள ஐந்து முகாம்களுக்கு சென்று பொருட்களை வழங்கியுள்ளதாக அவைத்தலைவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாண சபையால் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கை கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதனை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .