2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மாவீரர் தின துண்டுப்பிரசுரம் வைத்திருந்த இளைஞன் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 26 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், புத்தூர், மீசாலை சந்தியில் வைத்து இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேயிடத்தை சேர்ந்த வீரசிங்கம் சுலக்ஷன் (வயது 24) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இதனையடுத்து, இளைஞரின் வீட்டுக்கு சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அவரது வீட்டிலிருந்த கணினியை எடுத்து சென்றதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .