2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலையின் விரிவுரைகள் நிறுத்தம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 26 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரைகள் புதன்கிழமை (26) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, முகாமைத்துவ வணிக பீடத்துக்கான விரிவுரைகள், பரீட்சை விடுமுறையாக அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கலைப்பீடம் மற்றும் விஞ்ஞான பீடங்களுக்கான விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் அலுவலக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மாணவர்கள் விடுதிகளிலிருந்து பெருமளவு மாணவர்கள் வெளியேறி தங்களது  வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .