2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சதுர்த்திக்கு படையினரால் தடை

Gavitha   / 2014 நவம்பர் 26 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கிளிநொச்சி, பளை மாசார் பிள்ளையார் ஆலயத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற சதுர்த்தி பூசை நிகழ்வுகளை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேற்படி ஆலயத்தில் புதன்கிழமை (26) காலை 11.30 மணிக்கு மணி அடிக்கப்பட்டு பூசை ஆரம்பமாகவிருந்த வேளை, ஆலயத்துக்கு சென்ற 10க்கு மேற்பட்ட இராணுவத்தினர் மணி அடிக்க வேண்டாம் என தடுத்துள்ளனர்.

மணிகள் எதுவும் அடிக்காமல் பூசை செய்யும்படி உத்தரவிட்டு, பூசை நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளனர்.

இதனையடுத்து பூசை இடம்பெற்று அன்னதானம் கொடுக்க முற்பட்ட வேளை அதனையும் இராணுவத்தினர் தடுத்தனர்.

பிரபாகரன் பிறந்த தினத்துக்காகவா அன்னதானம் கொடுக்கின்றீர்கள் எனக்கேட்டுள்ளனர்.

வருடாவருடம் சதுர்த்தி தினத்தில் அன்னதானம் வழங்கப்படுவது வழமையென இராணுவத்தினருக்கு விளங்கப்படுத்தியும் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனையடுத்து, அன்னதானத்துக்கு சமைக்கப்பட்ட உணவை, கடையொன்றுக்கு கொண்டு சென்று பைகளில் கட்டி ஆலயத்துக்கு வந்தவர்களிடம் கொடுக்கப்பட்டதாக ஆலய நிhவாகத்தினர் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .