2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸ், காணி அதிகாரங்களை பெற நாங்கள் ஒத்துழைப்போம்: முருகேசு சந்திரகுமார்

George   / 2014 நவம்பர் 26 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


வடமாகாண சபைக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், புதன்கிழமை (26) தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் புதன்கிழமை (26) இடம்பெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்குதான் கூடுதலான வாழ்வாதார உதவிகளை செய்து வருகிறோம்.

பிழைகள் நடந்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அது எங்களை தான் சாரும்.
ஆகவே பிழைகளை நீங்கள் (வடமாகாண சபையினர்) தெரியப்படுத்தும் போது நாங்கள் திருத்திக்கொள்ள தயாராக உள்ளோம்.

நட்பு ரீதியில் எங்களுடன் இணைந்தால் உங்களின் முன்மொழிவுகளை எடுத்து செயற்படுத்த தயாராக உள்ளோம். பிரதேச செயலாளர்களுடன் இணைந்து திட்டங்களை நடைமுறைப்படுத்த விரும்புகின்றோம்.

எங்களுக்கு அரசாங்கம் தந்த நிதியை நாங்கள் முன்மொழிந்து செலவு செய்கிறோம். அதற்கு உத்தியோகத்தர்களை பயன்படுத்துகின்றோம்.

அதேபோல் மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாணசபைக்கு அதிகாரம் உண்டு. அதை உரிய காலத்துக்குள் மக்களிடம் போய் சேர வேண்டும் என்று தான் நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2, 3 இலட்சம் ரூபாவில் முன்பள்ளிகள் அமைக்கிறார்கள். அவை எதிர்காலத்திற்கு பொருத்தமற்றது. எனவே அவ்வாறான செயற்பாட்டை இனிவரும் காலங்களில் நிறுத்த வேண்டும். இவ்வாறு சந்திரகுமார் மேலும் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .