2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன, மத நல்லிணக்கம் வேண்டி ஆராதனை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 30 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் இன, மத நல்லிணக்கம் ஏற்படுவதற்கான சிவ வழிபாட்டு ஆராதனை நிகழ்வுகள் சித்தங்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் புதன்கிழமை (03) இடம்பெறவுள்ளது.

சிவஸ்ரீ சபா.வாசுதேவக்குருக்கள் தலைமையில் இடம்பெறும் இந்த ஆராதனை நிகழ்வில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைப்பதற்காகவும், நாட்டிலுள்ள மக்களின் வாழ்வு உயர்வடையவும் சிவனிடம் வேண்டப்படவுள்ளது.

காலை 08.00 மணிமுதல் மாலை 04.00 மணி வரையிலான வேளையில், மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது எண்ணங்கள், அபிலாசைகளையும் நிறைவேற்றுவதற்கு எல்லாம் வல்ல சிவலிங்க பெருமானுக்கு தமது கைகளால் திருமஞ்சன அபிஷேகத்தை செய்தும், நடைபெறுகின்ற உபசாரங்களில் இணைந்தும் இறைவனை மகிழ்வித்து திருவருளுக்கு பாத்திரமாகுமாறும் சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .