2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சபை ஒத்திவைப்பு

Kanagaraj   / 2014 டிசெம்பர் 01 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சபை நடவடிக்கை கோரமின்மையால் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (1.12.2014) திங்கட்கிழமை காலை கூடிய போது  2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சபையில் முன் வைக்கவிருந்தது.

இந்நிலையிலேயே சபை ஒத்தி வைக்கப்பட்டது.  ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களில் 8 பேர் மாத்திரமே சபைக்கு சமூகமளித்திருந்தனர்.
இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறியதால் சபை அமர்வு சிறு நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் சமூகமளித்திருக்க வில்லையெனவும் அவர் மேலும் குறி;பபிட்டார்.

கிழக்கு மாகாண சபையில், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 22 பேரும் எதிர் தரப்பு உறுப்பினர்கள் 15 பேரும் இருக்கின்றமை  குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .