2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

'ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தவும்'

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 01 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களை வன்னிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யும் மாகாண கல்வி திணைக்களத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

வன்னி போன்றே வலிகாமம் கல்வி வலயமும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். எமது கல்வி வலயத்தில் பாட ரீதியான ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ள நிலையில் வன்னிப் பகுதிக்கு ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும் என அவர் கூறினார்.

இது தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிடமும் கோரிக்கை முன்வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .