2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடக்கு, கிழக்கு தமிழர்கள் ஒரு குடையின் கீழ் இருப்பது பலம்: மாகாண உறுப்பினர் சர்வேஸ்வரன்

Thipaan   / 2014 டிசெம்பர் 02 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குடையின் கீழ் இருக்கின்றமை எமது பலமாகும். இது எமது இறுதியான தீர்;வொன்றை பெறும் வரை தொடர வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன,; திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

தென்மராட்சியில், பெண்கள் கிராமிய அபிருத்தி சங்க உறுப்பினர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான நிதி வழங்கும் வைபவம் தென்மராட்சி கிராமிய அபிவிருத்தி சங்க கட்டடத்தில் இடம்பெற்ற வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாம் தமிழ் மக்களுக்கான தீர்வொன்றுக்காக முன்நகர வேண்டும். அதற்கு சர்வதேச சமூகம் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும்.
13ஆம் திருத்த சட்டமும் மாகாண சபை அமைப்புக்களும் தமிழ்; மக்களுக்கான சரியான தீர்வாக அமையாது. மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை  கட்;டுப்படுத்தக்கூடிய வகையில், முடக்கக்கூடிய வகையில் இலங்கையில் சட்ட திட்டங்கள் உண்டு.

பெண்கள் தங்கி வாழும் நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமானது. மனித குலத்தின் ஆரம்பம் என்பது தாய்வழி சமூகமாய் தான் இருந்தது.

நாடோடிகளாக இருந்த இச்சமூகம் ஓர் இடத்தில் தங்கி வாழுகின்ற சூழல் உருவானது. ஆரம்பத்தில் நதிக்கரைகளிலேயே மக்கள் தங்கி வாழ ஆரம்பித்தனர். மனித நாகரீகம் நதிக்கரைகளில் ஆரம்பித்தது.

இதன் போது பெண்கள் வீட்டில் தமது குடும்பத்தை நிர்வகிக்கின்றவர்களாகவும் ஆண்கள் வெளியில் சென்று பொருளாதாரத்தை ஈட்டுவோராகவும் இருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே பெண்கள் வீட்டில் தங்கியிருப்பவர்களாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுவே ஆணாதிக்க சமுதாயத்துக்கு வழிகோலியது.

இன்று ஆணாதிக்க சமூகமே நிலவுகின்றது. அது கருத்துருவங்கள் தொடங்கி அன்றாட சமூக பொருளாதார கலாச்சார மற்றும் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் ஆண்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றார்கள்.

தமிழர்களாகிய நாம் இந்த மண்ணின் ஆதிகுடிகள். ஆனால், சிங்கள பௌத்த மேலாதிக்கம் அதனை புறந்தள்ளி எம்மை அடக்கு முறைக்கு உட்படுத்தி வருகின்றது. பௌத்த சமயம் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கை வேந்தன் இராவணன் ஒரு சிவபக்தனாக இருந்தமை வெளிப்படையானது.

எனவே அதற்கு முன்னர் இலங்கையிலிருந்த மக்கள் சைவ கடவுள்களை தான் வணங்கினார்கள். பௌத்தம் வந்த பின்னர் தான் சிங்கள மொழியென்பது படிப்படியாக வளர்ந்து வந்திருக்கின்றது. ஆகவே சிங்களம் இந்நாட்டில் காலத்தால் மிகவும் பிந்தியது. இதனை மறைப்பதற்காக இலங்கை சுதந்திரமடைந்த பின் தமிழ்மக்கள் அடக்கியொடுக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள்.

தமிழர்களது மொழியுரிமை பறிக்கப்பட்டது. அவர்களின் நிலவுரிமை அபகரிக்கப்பட்டது. வெலிஓயா (மணலாறு) திட்டம் தொடங்கி தமிழ் மக்களின் நிலங்கள் இன்று வரை தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் தான் எங்கள் போராட்டங்கள் அகிம்சை ரீதியாக ஆரம்;பிக்கப்பட்டன.

1972 ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பிலே தமிழ் மக்களுக்கு இருந்த சிறு பாதுகாப்புகள் கூட நீக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கல்வித்துறையில் முன்னிலையில் இருந்த தமிழ்மக்களை அடக்கியாள தரப்படுத்தலை கொண்டு வந்தனர்.

இந்த நிலையின் பிறகு தந்தை செல்வநாயகம் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மகாநாட்டில் தனிநாட்டு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து 30 ஆண்டுகள் வரை ஆயுத போராட்டம் நடந்தது. இதன் போது வடக்கு, கிழக்கில் மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் சொத்துக்களையும் இழந்தனர். பல தியாகங்களை செய்தனர். இன்று நாங்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையில் இருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குடையின் கீழ் இருக்கின்றோம் என்பதே எமது ஒரே பலம் என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .