2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யுத்தமற்ற காலத்திலும் மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது: சி.வி

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 02 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

போர்க்காலமும் அதன் பின்னைய காலமும் எமது மக்களை மிக ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கிளிநொச்சி, வேரவில் இந்து மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுக்கு அனுப்பி வைத்துள்ள சிறப்புரையில் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வேரவில் இந்து மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவும் 'சதவிழுது' மலர் வெளியீட்;டு விழாவும் திங்கட்கிழமை (01) வித்தியாலய மண்டபத்தில் வித்தியாலய அதிபர் திருமதி ப.சோதிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்வதாக இருந்;தபோதும் தவிர்க்க முடியாத காரணத்;தால் கலந்துகொள்ள முடியவில்லையெனக் கூறி, தனது சிறப்புரையை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மூலம் அனுப்பி வைத்திருந்தார்.

அவ்வுரையில் மேலும் குறிப்பிட்டிருந்ததாவது,

மற்றைய பிரதேசங்களை விட அதிக சிரமங்களுக்கு முகம் கொடுக்கும் பிரதேசமாக பூநகரி பிரதேசம் காணப்படுகின்றது. இந்த பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் போதிய வசதிகள் அற்ற நிலையிலும் மிக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து கல்விப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

பௌதீக வளங்கள் பற்றாக்குறை, ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு மத்தியிலும் குன்றுமேல் எரியும் விளக்கு போல் இந்த மாணவர்கள் பிரகாசிக்கின்றனர்.

பல்வேறு குறைபாடுகளும் சிரமங்களும் உங்கள் எல்லோரையும் கஷ்டப்பட வைக்கின்றது என்பது உண்மை. போர்க்காலமும் அதன் பின்னைய காலமும் எமது மக்களை மிக ஆழமாக சிந்திக்க வைத்துள்ள என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்;டை ஒட்டி வெளியிடப்பட்ட சதவிழுது எனும் நூலை கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் க.முருகவேல் வெளியிட்டு வைத்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .