2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இயற்கையால் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: ஈ.பி.டி.பி

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 02 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


இயற்கை தாண்டவத்தால் பாதிப்புக்குள்ளான ஏழை மக்களின் அன்றாட வாழ்வியலை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒருபோதும் விரும்புவதில்லை என அந்த கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட வலி.வடக்கு மக்களை திங்கட்கிழமை (01) மாலை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், குகேந்திரன் தொடர்ந்து கருத்து கூறியதாவது, 

வலி.வடக்கு மக்களின் இருப்பிடங்களை பார்க்கும் போது, வேதனையாகவுள்ளது. இயற்கையின் பிடியில் தற்போது நாங்கள் சிக்கியுள்ளோம். இது தற்காலிக நிலைமை தான். மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

மக்களுடைய தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளினூடாக மேற்கொண்டு வருகின்றார் என குகேந்திரன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .