2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் மூன்று குளங்கள் வான் பாய்கின்றன

Thipaan   / 2014 டிசெம்பர் 02 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு, வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்துக்குட்பட்ட கோட்டை கட்டிய குளம், மருதங்குளம், பழைய முறிகண்டிக்குளம் ஆகிய குளங்களில் கொள்ளளவைவிட நீர்மட்டம் அதிகரித்தமையால், அக்குளங்களில் நீர் வான் பாய்கவதாக வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றமையடுத்து, வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து மேற்படி மூன்று குளங்களிலும் வான் பாய்கின்றது.

கோட்டை கட்டிய குளத்தில் 9 அடி 11 அங்குலமும் (5 அங்குலம் வான் பாய்கின்றது), மருதங்குளத்தில் 9 அடி 10 அங்குலமும் (4 அங்குலம் வான் பாய்கின்றது), பழைய முறிகண்டி குளத்தில் 9 அடி 8 அங்குலமும் (2 அங்குலம் வான் பாய்கின்றது) தற்போதய நீர் மட்டமாக இருக்கின்றது.

இவற்றை தவிர, வவுனிக்குளத்தில் 23 அடியும் ஐயன்குளத்தில் 8 அடி 3 அங்குலமும் அம்பளப்பெருமாள் குளத்தில் 7 அடி 8 அங்குலமும, தெனியன்குளத்தில் 6 அடி 5 அங்குலமும் கல்விளான்குளத்தில் 10 அடியும் மல்லாவி குளத்தில் 6 அடி 2 அங்குலமும் கொல்விளாங்குளத்தில் 8 அடி 11 அங்குலமும் தேறாங்கண்டல் குளத்தில் 11 அடி 2 அங்குலமும் நீர் மட்டம் காணப்படுகின்றது.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மிகுதி குளங்களிலும் வான் பாயும் என பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .