2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மீனவர்களுக்கு மழை பாதுகாப்பு அங்கிகள்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். உடுத்துறை பகுதியிலுள்ள 100 மீனவர்களுக்கு மழை பாதுகாப்பு அங்கிகள் 2 வழங்கப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி புதன்கிழமை (03) தெரிவித்தார்.

மழை காலங்களில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் அவசியமாகின்றன. கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் காப்புறுதி செய்த 100 மீனவர்களுக்கு 2,500 ரூபாய் பெறுமதியான பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

மிகுதி மீனவர்களுக்கும் இவற்றை படிப்படியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .