2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

2015 மார்ச் மாதம் காங்கேசன்துறைக்கும் ரயில் போகும்

George   / 2014 நவம்பர் 18 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்தேவி ரயில் சேவையானது 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்ப்பதாக யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, திங்கட்கிழமை (17) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வடக்கிற்கான ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது யாழ். ரயில் நிலையம் வரையில் ரயில் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனையடுத்து, யாழ்தேவியின் இறுதி எல்லையான காங்கேசன்துறை வரையில் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தெல்லிப்பழை புகையிரத நிலையம் வரையிலான ரயில் சேவை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனை தொடர்ந்து காங்கேசன்துறை வரையிலான சேவையானது எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம் என மூர்த்தி மேலும் கூறினார்;.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .