Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2014 ஜூலை 20 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
முஸ்லிம் இனம் அழிந்துகொண்டு இருக்கின்றது. தமிழ் மக்கள் அழிந்தாலும் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவைகள் போல மீண்டெழுந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் போராட்டக் குணம் எங்களிடம் இல்லையென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலி நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.
வலுவான ஐக்கியத்தினை நோக்கி என்ற தொனிப்பொருளின் கீழ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34ஆவது மாநாடு சனிக்கிழமை (19) முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை ஒன்றிணைக்கும் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஹஸன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழர்களிடமுள்ள போராட்டக் குணத்திற்குத் தலை வணங்குகின்றோம். முஸ்லிம் தலைமைகள் தங்களிடமுள்ள நப்பாசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைக் கைவிடவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்ததினூடாக வரலாறு காணாத வெற்றியாக மாகாண சபையில் 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டோம்.
இன்று நாட்டில் 300இற்கும் மேற்பட்ட இனவாத ரீதியிலான வன்முறைகள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன. இவற்றிலிருந்து எமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளும் நிலையில் நாம் இன்று உள்ளோம்.
தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் போது, தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கான தீர்வும் கிடைக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
M.A.a.Rasheed Sunday, 20 July 2014 01:54 PM
அப்படி இல்லை. முஸ்லிம்கள் சமாதானமாக வாழ விரும்புகின்றார்கள். ஆனால் குட்டக்குட்ட குனிபவன் அல்ல முஸ்லிம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025