2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

யாழில் வீடுகளை கையளித்தார் மோடி

George   / 2015 மார்ச் 14 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இந்திய வீட்டுத்திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயனாளியிடம் கையளித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய வீட்டுத்திட்டத்தில் இளவாலை வடமேற்கு பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட 361 வீடுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றை பயனாளியிடம் கையளித்தார்.

அத்துடன் 10 வீட்டு பத்திரங்களையும் பயனாளிகளிடம் வழங்கி வைத்தார்.

இதன்போது உரையாற்றிய இந்திய பிரதமர நரேந்திர மோடி, நான் மேற்கொண்ட பயணங்களில் என்னை கண்கலங்க வைத்த பயணமாக இன்றைய பயணம் உள்ளது.

இலங்கையை சுனாமி தாக்கிய போது பாதிப்படைந்த மக்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம் தற்போது போரால், பிற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

45 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 20 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடையும் நிலையிலுள்ளன.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக எண்ணி செங்கற்களால் மட்டும் கட்டி இவ்வீட்டுத்திட்டத்தை இந்தியா வழங்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதாக எண்ணியே இதனை நாங்கள் செய்கின்றோம் என மோடி மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X