2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

யானை வெடிகளுக்கு யானைகள் அஞ்சுவதில்லை

George   / 2015 மார்ச் 15 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

யானைகளின் தொல்லை கூடுதலாக காணப்படும் கிராமங்களுக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தால், யானை வெடிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் யானை வெடிகளுக்கு யானைகள் பயப்படுவதில்லையென பொதுமக்கள் தன்னிடம் கூறியதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் இராஜேந்திரன் குருபரன், ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் பல பகுதி மக்கள் யானைகளின் தொல்லைகளை எதிர்கொண்டுள்ளனர்.

யானைகளின் நடமாட்டத்தால் ஒட்டுசுட்டான் நகரத்திலிருந்து மாங்குளம் நகரத்துக்கு இரவு வேளைகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரவுவேளைகளில் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழையும் யானைகள் தென்னை, பப்பாசி, பலா, மா ஆகிய பயன்தரு மரங்களையும், சிறுபயிர்ச் செய்கைகளையும் அழித்து வருவதாக மக்கள் கூறினர்.

இது தொடர்பில் ஓட்டுசுட்டான் பிரதேச செயலாளார் கூறுகையில்,

மணவாளன்பட்டமுறிப்பு, தச்சடம்பன், முத்தையன்கட்டு, பனிக்கன்குளம், அம்பகாமம் ஆகிய கிராமங்களில் யானைகளின் தொல்லை இருப்பதாக அப்பகுதி மக்கள் எனக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கின்றனர்.

யானைகளைக் கட்டுப்படுத்தும்படியும், யானைகளின் தொல்லைகள் கூடுதலாகக் காணப்படும் கிராமங்களுக்கு மின்சார வேலிகள் அமைத்துத் தரும்படியும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கோரியுள்ளோம்.

யானைகளின் தொல்லை கூடுதலாகக் காணப்படும் கிராமங்களுக்கு வனஜீவராசி திணைக்களத்தினர் யானை வெடிகளை வழங்கினர். யானை வெடிகளுக்கு யானைகள் பயப்படுவதில்லையென மக்கள் கூறுகின்றனர் என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X