Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மார்ச் 28 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொ.சோபிகா
யாழ். மாவட்டத்தில் பயிரிடப்படும் வெங்காயத்தின் மூலம் ஒரு ஹெக்டேயருக்கு 14 முதல் 15 மெற்றிக் தொன் விளைச்சல் பெறப்படுகின்றது. இதனை மேலும் அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக வடமாகாண விவசாயத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெங்காய உற்பத்தியாளர்களுக்கு 'திகடிக்க' வெங்காயப்பூவில் இருந்து பெறப்பட்ட விதையை வழங்கினோம். அத்துடன் வெங்காய உற்பத்தியாளர்களுக்கு உயிர்க்கரி செய்வதற்குரிய உபகரணங்களையும் பயிற்சியையும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
எமது திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளமையால் இவ்வருடம் உயிர்க்கரியை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம். மண்ணின் வளத்தை 5,000 வருடங்கள் குன்றாமல் பாதுகாக்கும் திறன் உயிர்க்கரிக்கு உள்ளது.
உயர் வெப்பத்தினால் கருக்கப்பட்ட இந்த உயிர்க்கரியை வெங்காயச்செய்கைக்கு மட்டுமல்லாது ஏனைய பயிர்ச் செய்கைக்கும் பயன்படுத்த முடியும். நீரை உறிஞ்சி வைத்திருந்து பயிரை குளிர்மையடையச் செய்யும் ஆற்றல் உயிர்க்கரிக்கு உண்டு என அவர் தெரிவித்தார்.
55 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
3 hours ago