Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ற.றஜீவன்
யாழ். கொடிகாமம் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை வீதியை கடந்தவரை வான் ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை வீதி கொடிகாமத்தைச் சேர்ந்த முத்துவேல் அகிலேஸ்வரன் (வயது 34) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
முச்சக்கரவண்டியின் சாரதியான இவர், தனது முச்சக்கரவண்டியை வீதியின் ஓரத்தில் நிறுத்திவிட்டு வீதியின் மறுபக்கம் இருந்த கடைக்குச் செல்வதற்காக வீதியை கடந்தபோதே, வான் இவரை மோதியுள்ளது.
சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025