2025 ஜூலை 16, புதன்கிழமை

இறைச்சிக்கு மாடுகளை வெட்டியவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கபிலன்

துன்னாலை கிழக்கு பகுதியில் உள்ள காடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் இறைச்சிக்கு இரண்டு மாடுகளை வெட்டியதாகக் கூறப்படும் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கைதுசெய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து 45 கிலோகிராம் இறைச்சியையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் இன்றையதினம் காலை தமக்கு கிடைத்த தகவலை அடுத்து,   குறித்த காட்டுப்பகுதியை சுற்றிவளைத்ததுடன், இந்தச்  சந்தேக நபரையும்  கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இதன்போது  ஏனைய இருவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .