2025 ஜூலை 16, புதன்கிழமை

குடும்பநல உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 12 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கீழ் பணியாற்றும் குடும்பநல உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (12) ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சுமார் 12 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தங்களுக்கு இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனக்கூறி 21 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 3 முறை நடைபெற்ற நிரந்தர நியமனத்தின் போது தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கூறினர்.

தங்களுக்கான நிரந்தர நியமனம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என முன்னாள் பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி ஆ.கேதீஸ்வரன் கூறியபோதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர்கள் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .