2025 ஜூலை 16, புதன்கிழமை

அரச காணிகளில் குடியிருப்பவர்களுக்கு காணி உறுதி வழங்கப்பட வேண்டும்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களில் சிலருக்குரிய காணி உறுதிகள் அண்மையில் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள டக்ளஸ் தேவானந்தா, அதேபோன்று ஏனைய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரிவுகளில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கும் காணி உறுதிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கட்டைக்காடு கிழக்கு பகுதியில் அரச காணியில் குடியிருக்கும் மக்களது காணி தொடர்பான பிரச்சினையை உடன் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .