2025 ஜூலை 16, புதன்கிழமை

அக்கராயன் குளத்தின் சிறுபோக செய்கைக்கான நீர் திறப்பு

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன்குளத்தின் கீழான சிறுபோக செய்கைக்குத் தேவையான நீர், 14ஆம் திகதி திறந்துவிடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய குளமான அக்கராயன் குளத்தின் கீழ் இந்த வருடம் 2,500 ஏக்கரில் நெல் மற்றும் உபபயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் செய்கைக்குத் தேவையான நீரானது திறந்து விடப்பட்டுள்ளது.

அக்கராயன் குளம் முழுமையாகப் புனரமைக்கப்பட்டால் சிறுபோக செய்கையில் 4000 ஏக்கரில் சிறுபோகச் செய்கை மேற்கொள்ள முடியும்.

குளத்தை முழுமையாக புனரமைப்புச் செய்வதற்கு 1,000 மில்லியன் ரூபாய் தேவையென பொறியலாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .