2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்ட செயலாளரை சந்தித்தார் சுரேஷ் எம்.பி

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனுக்கும் இடையிலான சந்திப்பு, யாழ். மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை(17) நடைபெற்றது.

அரசாங்கத்தால் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட 1,100 ஏக்கர் காணிகளில் 4 பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த முகாம்கள் தொடர்ந்து இருந்தால் அந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்;த்த முடியாது எனவும் சுரேஷ் பிரேமசந்திரன்;, மாவட்டச் செயலருக்குச் சுட்டிக்காட்டினார்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில், மக்களின் மீள்குடியேற்றத்துக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, மலசலக்கூடம் ஆகிய அடிப்படை தேவைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் தெரிவித்த சுரேஷ் எம்.பி., சங்கரத்தைப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக அந்த பகுதியில் தற்காலிக குடிநீர்த் தாங்கிகளை வைக்குமாறும் மாவட்டச் செயலாளரிடம் கோரினார்.

சுரேஷ் எம்.பி.யின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மாவட்டச் செயலாளர் இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .